| 2-6-2010 Wednesday |
| கேள்வி எண் - 9. மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது - இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி?. ஏனெனில் - புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே எப்படி? பதில்: 1. இஸ்லாமிய மார்க்கம் - தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நைடகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்துள்ளது. மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் - மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்ற விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை செய்துள்ளது. ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம். அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதித்துள்ளது. மேற்படி பிராணிகள் - அமைதியானதும் - பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான நாங்கள் - அமைதியான பிராணிகளான - ஆடு - மாடு - ஒட்டகம் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் அமைதியை விரும்புகிறவர்களாக - இருக்கின்றோம். 2. அருள் மறை குர்ஆனும் - நபிகளாரின் பொன்மொழியும் - கெட்ட உணவு வகைகளை உண்பதை தடை செய்துள்ளது. சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்திருக்கும் அல்லாஹ் - சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அல்லாஹ் தடை செய்திருக்கிறான் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொள்ள - நபிகளாரின் பொன்மொழி ஒன்றே போதுமானதாகும். 3. மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்தி: அ. மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும் உடைய காட்டு விலங்குகளான - சிங்கம் புலி நாய் ஓநாய் போன்றவைகள். |

No comments:
Post a Comment