| 2-6-2010 Wednesday |
| கேள்வி எண்: 3 குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் 'நாம்' அல்லது 'நாங்கள்' என்ற பன்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?. பதில்: இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாக கொண்ட மார்க்கம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்கிற கொள்கையில் எந்தவித மாறுபாடும் இன்றி செயல்பட்டு வரக் கூடிய மார்க்கம் இஸ்லாம். அல்லாஹ் ஒருவனே. அவனுக்கென்று தனித்தன்மைகள் உண்டு என்ற நம்பிக்கையில் எந்தவித மாற்றமுமில்லை. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் தன்னைப்பற்றி குறிப்பிடும்பொழுது 'நாம்' அல்லது 'நாங்கள்' என்கிற வார்த்தையை பயன் படுத்தப்படுகிறது. அவ்வாறு 'நாம்' அல்லது 'நாங்கள்' என்கிற வார்த்தையை பயன் படுத்துவதால் இஸ்லாம் பல தெய்வக் கொள்கையை உடையது என்கிற வாதம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத வாதமாகும். இரண்டு விதமான பன்மைகள் அ. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் - இங்கிலாந்து நாட்டின் ராணி தன்னைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'I-ஐ' என்று குறிப்பிடாமல் 'we-வீ' என்று குறிப்பிடுவார். இதற்கு 'மரியாதைப் பன்மை' (Royal Plural) என்று பெயர். ஆ. இறந்து போன இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஹிந்தியில் பேசும் பொழுதெல்லாம் 'ஹம் தேக்னா சாத்தா ஹை' - நாம் பார்க்க விரும்புகிறோம்' என்று உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இங்கும் 'ஹமே' என்கிற ஹிந்தி வார்த்தைக்கு 'நாம்' என்ற பொருளாகும். 'ஹமே' என்கிற ஹிந்தி வார்த்தையை - ஹிந்தி மொழியில் உள்ள மரியாதைப் பன்மைக்கு உதாரணமாகக் கொள்ளலாம். இ. அது போலவே அல்லாஹ், தன்னைப் பற்றி அருள்மறையில் குறிப்பிடும் பொழுது 'நஹ்னு' (நாம் அல்லது நாங்கள் என்ற பொருள்) என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்டது என்கிற அர்த்தத்தில் வருகின்ற பன்மை அல்ல. மாறாக மரியாதைப் பன்மைக்கு பயன்படுத்தக் கூடிய வார்த்தை. |

No comments:
Post a Comment